இறைவி – விசாரணை வரை – 2016இன் 15 சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்
திரைக்குப் பின்னால் நடக்கும் இழுபறி ஆட்டங்களையும், பெரிய நட்சத்திரங்களின் சுமார் படங்களையும் தாண்டி தமிழ்த் திரைப்படங்கள் நன்றாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. 2016-லும் வழக்கம் போலச் சில பெரிய நடிகர்களும் இயக்குநர்களும் சில சொதப்பல்களைச் சந்தித்தார்கள். சராசரியான திரைப்படங்கள் கொண்டாடப்பட்ட போது, சில நல்ல கலைஞர்கள் தங்கள் வித்தியாசமான படைப்புகளை வெளியே கொண்டு வரவே சிரமப்பட்டார்கள். இருந்தாலும் 2016-ல் தமிழ் சினிமா சில கருத்தான படங்களையும், நல்ல ஜனரஞ்சகமான படங்களையும் தந்தது. நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர்கள் வெற்றிமாறனும், ...